ரஷ்யா:முஸ்லிம் மாணவிகள் முக்காடு அணிவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவிகள் தலையை முக்காடிட்டு வருவது கூடாது என தெரிவித்துள்ளார். .
ரஷ்யாவில் மொத்தமுள்ள 15 கோடி மக்களில், இரண்டு கோடி பேர் முஸ்லிம்கள் ஆவர்.
செசன்யா, வடக்கு காகசஸ், டடார்ஸ்டான் ஆகிய மாகாணங்களில் அதிகளவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இங்கு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் முக்காடு அணிந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பள்ளி முதல்வர்கள் மிரட்டப்படுகின்றனர்.
இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறுகையில், ரஷ்யா மதசார்பற்ற நாடு. அனைத்து குடிமக்களிடையே சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறது. இதே சட்டதிட்டங்களை தான் பள்ளியிலும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment