Saturday, October 20, 2012

திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நிஜமாக நடந்தது என்ன?


திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில்  நேற்று மதியம் ஏர்-இந்தியா விமானம் ஹைஜாக் எச்சரிக்கையை அடுத்து, ஆயுதப் படையினரால் சூழ்ந்து கொண்டது பற்றி வெவ்வேறான தகவல்கள் உலாவுகின்றன.
கோபமடைந்த பயணிகள் காக்பிட்டுக்குள் புகுந்ததை அடுத்தே, பைலட் ஹைஜாக் அபாய சிக்னல் அனுப்பினார் என்பது ஒரு தகவல். ஆனால், பயணிகள் மற்றும் கேரள போலீஸின் கூற்றுப்படி, இது தவறான குற்றச்சாட்டு.

பயணிகள் யாரும் காக்பிட்டுக்குள் சென்றதாக தெரியவில்லை. விமானத்தின் முன்பகுதியில் நின்று சிலர் கோபமாக பேசியிருக்கிறார்கள். விமானியிடமும் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். கோபமடைந்த (அல்லது அச்சமடைந்த) கேப்டன், தவறான எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் என்றே தெரிகிறது.


இந்த விவகாரம் என்ன?

அபுதாபியில் இருந்து கொச்சி செல்லும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் தடம் இலக்கம் IX 4522, அபுதாபியில் இருந்து இரவு 9.15க்கு கிளம்பியிருக்க வேண்டும். தாமதமாக கிளம்பியது. அதிகாலை 3.30க்கு கொச்சியில் லேன்ட் செய்ய வேண்டிய விமானம், கேரள வான் எல்லைக்கு வந்தபோது 5 மணியாகிவிட்டது. நிலைமையை இன்னமும் மோசமாக்க, கொச்சியில் பனிப்புகார் காரணமாக ஜீரோ விசிபிளிட்டி என அறிவிக்கப்பட்டது. அங்கே லேன்ட் பண்ண முடியாது.

ஆல்டர்னேட் ஏர்போர்ட், திருவனந்தபுரம்.

விமானம் திருவனந்தபுரத்துக்கு திசை திருப்பப்பட்டு, காலை 6.30க்கு தரையிறங்கியது. அதற்குப் பிறகு என்ன செய்வது என்ற திட்டம் ஏதுமில்லை.
ஆல்டர்னேட் ஏர்போர்ட் வரை பறந்துவிட்டதால், எரிபொருள் நிரப்பினால்தான் கொச்சிவரை செல்லமுடியும். ஏற்கனவே எரிபொருள் பில்லுகள் கட்டப்படாத நிலையில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த இழுபறியில் ஏர்-இந்தியா அதிகாரிகள் இருக்க நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

மதியம்வரை ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. 9 மணிநேரமாக தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தில் இருந்து பயணிகளும் இறங்க அனுமதிக்கப்படவில்லை. கொதிப்படைந்த பயணிகள், விமான ஊழியர்களுடன் கோபமாக பேசத் தொடங்கினர். அப்போதுதான், விமானிகளில் ஒருவர், ஹைஜாக் அபாய சிக்னல் அனுப்பினார்.

சிக்னல் கிடைத்தவுடன், இது பாதுகாப்பு விவகாரமாகி விட்டது. ஆயுதப் படையினர் விமானத்தை சூழ்ந்து கொண்டனர்.

சர்வதேச சிவில் ஏவியேஷன் நடைமுறையில், விமானி அபாய அறிவிப்பு செய்ய வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. காக்பிட்டின் இதற்காக 3 கோட்கள் உள்ளன. முதலாவது கோட், சூழ்நிலை ‘unlawful interference’ ஆக இருந்தால் அழுத்தப்பட வேண்டியது. ஹைஜாக் இந்தப் பிரிவில்தான் வருகிறது.

இரண்டாவது கோட், விமானத்துக்கும் தரைக்கும் கம்யூனிகேஷன் அற்றுப் போனால் பயன்படுத்துவது. மூன்றாவது, ‘விமானத்துக்குள் எமர்ஜென்சி’. இந்த கோட்தான் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். குழப்பத்தில், அல்லது கோபத்தில் முதலாவது ‘கோட்’டை விமானி பயன்படுத்தியிருக்கிறார்.
நிலைமை புரிந்தபின், விமானம் கொச்சிக்கு மதியம் 1.55க்கு புறப்பட்டு சென்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza