எஸ்.டி.பி.ஐ கட்சி யின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
இதயம் நிறைந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்
நிறைந்த மகிழ்சியோடும், மிகுந்த சந்தோசத்தோடும் தியாக திருநாளாம் ”பக்ரீத்” பெருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு என் இதயம் நிறைந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைக்கட்டளையை ஏற்று, தள்ளாத வயதில் பெற்றெடுத்த தனையனையே தியாகம் செய்ய தயாரான, தியாகத்தின் அடையாளமாய் திகழ்ந்த இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் திருநாளே ”பக்ரீத்” பெருநாள்.
சமுதாய முன்னேற்றதிற்காகவும் நம் நாட்டு மக்களின் நலனுக்காகவும் தியாகங்களும், அற்பணிப்புகளும் தேவைப்படுகிற இக்கால கட்டத்தில் இப்ராஹிம் நபி அவர்களின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி தியாகங்கள் பல செய்திட தயாராவோம். இவ்வாறு அவர் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment