Thursday, October 25, 2012

இந்தியா எங்களின் நண்பன்! – சீனா


பெய்ஜிங்:இந்தியா எங்களின் எதிரி நாடு அல்ல  என்று சீனா தெரிவித்துள்ளது.  1962ம் ஆண்டு நடந்த போருக்குப்பின், உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டதாகவும், இந்தியா தங்களது நட்பு நாடே அன்றி, எதிரி அல்ல என சீனா தெரிவித்துள்ளது.
1962-ல் இந்தியா சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக போர் நடந்தது. இதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக மறைந்து, இருநாட்டு உறவு முறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இருப்பினும் எல்லைப்பிரச்சினையில் அது வரம்பு மீறி நடந்து வருகிறது.

இந்நிலையில் அந்த போரின் 50-ம் ஆண்டுகள் ஆனாதை முன்னிட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக டெல்லியில் நிகழ்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ, தற்போதைய சூழலில், உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டது. இந்தியா மற்றும் சீனா ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் நாடுகள். இருநாடுகளும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன.
தற்போதைய சூழலில், சீனா இந்தியாவை ஒரு பார்ட்னராகத்தான் பார்க்கின்றதே அன்றி எதிரியாக பார்க்கவில்லை. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா எப்போதும் தயாராக இருப்பதாகவும் லீ தெரிவித்தார்
இதனிடையே 1962-ம் ஆண்டு நடந்த போரால் இரு நாடுகளும் சந்தித்த சேதாரத்தை மனதில் நிறுத்தி, ஒரு பிரிக்க முடியாத கூட்டாளியாக செயல்படவேண்டும் என்று சீனா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza