நாக்பூர்:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும்போது இதனை அவர் தெரிவித்தார்.
“ராமஜென்ம பூமிக்கு அருகிலேயே பெரிய கட்டிடங்கள் கட்ட முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பணிகளுக்கு மாநில அரசுகள் உதவி செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.
ராம்ஜென்ம பூமி கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில் இதுபோன்ற பொறுப்பற்ற திட்டங்களை தீட்டுவது, நீண்ட நாட்களாக கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை பாழ்படுத்துவதுடன், நீண்ட நாட்களாக நிலவி வரும் அமைதிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை பரிசீலனை செய்து, அயோத்தியில் ராம்ஜென்ம பூமி கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்ற வேண்டும். இதுதான் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு ஒரே வழி”என்றும் அவர் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment