Sunday, October 21, 2012

அபய பூமி கஅபா!


கஅபா அபய பூமி என்பதின் விளக்கம்
திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் கஅபாவை அபய பூமியாக பாதுகாப்புத் தலமாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான்.
وَقَالُوا إِنْ نَتَّبِعِ الْهُدَى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آَمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (57) سورة القصص
அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்க ளில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் (அல்குர்ஆன் 28:57)
أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آَمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ اللَّهِ يَكْفُرُونَ (67) العنكبوت
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்க வில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா? (அல்குர்ஆன் 29:67)
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ (96) فِيهِ آَيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آَمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ (97) آل عمران
அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல்குர்ஆன் 3:14)
மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் மக்கமா நகரத்தை அபய பூமி, பாதுகாப்புத் தலம் என்று குறிப்பிடுகிறான்.
மக்காவை அல்லாஹ் அபய பூமியாக ஆக்கியிருக்கிறான் என்பதின் கருத்து ஒவ்வொரு மனிதனும் அதற்குரிய புனிதத்தை பேணவேண்டும் என்பதுதான். மனிதர்களால் மக்காவின் புனிதத்திற்கு எந்த பாதிப்புமே ஏற்படாது என்ற கருத்தில் அல்ல. மக்காவின் புனிதத் தன்மைக்கு யாராவது பாதிப்பு ஏற்படுத்தினால் அவனுக்கு மறுமையில் கடுமையான தண்டனை காத்திருக்கிறது.
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِي جَعَلْنَاهُ لِلنَّاسِ سَوَاءً الْعَاكِفُ فِيهِ وَالْبَادِ وَمَنْ يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ (25) سورة الحج
(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 22:25)
6882
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلَاثَةٌ مُلْحِدٌ فِي الْحَرَمِ وَمُبْتَغٍ فِي الْإِسْلَامِ سُنَّةَ الْجَاهِلِيَّةِ وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ رواه البخاري
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மனிதர்கற்லேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற் காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (6882)
மனிதர்களினால் மக்காவின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படவே செய்யாது என்றால் அங்கே குற்றச் செயல்களைச் செய்பவர்களுக்கு மாபெரும் தண்டனை உள்ளது என அல்லாஹ் கூற வேண்டிய அவசியமில்லை
104
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي سَعِيدٌ هُوَ ابْنُ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي شُرَيْحٍ أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ سَعِيدٍ وَهُوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى مَكَّةَ ائْذَنْ لِي أَيُّهَا الْأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلًا قَامَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي وَأَبْصَرَتْهُ عَيْنَايَ حِينَ تَكَلَّمَ بِهِ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ فَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا وَلَا يَعْضِدَ بِهَا شَجَرَةً فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا فَقُولُوا إِنَّ اللَّهَ قَدْ أَذِنَ لِرَسُولِهِ وَلَمْ يَأْذَنْ لَكُمْ وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ ثُمَّ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالْأَمْسِ وَلْيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ فَقِيلَ لِأَبِي شُرَيْحٍ مَا قَالَ عَمْرٌو قَالَ أَنَا أَعْلَمُ مِنْكَ يَا أَبَا شُرَيْحٍ لَا يُعِيذُ عَاصِيًا وَلَا فَارًّا بِدَمٍ وَلَا فَارًّا بِخَرْبَةٍ رواه البخاري
சயீத் பின் அபீசயீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது: (யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராகன மக்காவை நோக்கி ஒரு படைப்பிரிவுகளை அனுப்பியபோது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
"தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: எனது காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. நபியவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. -அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (மக்கா வெற்றி நாளில், ஒருபகல் பொபது மட்டும்) இங்கு போரிட்டதனால் (அதை ஆதாரமாகக்கொண்டு) இதைப் பொதுஅனுமதி என்று யாரேனும் கருதினால், "அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்)தான் அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை'' என்று சொல்லிவிடுங்கள். "எனக்குக் கூட (நேற்றைய) பகல்பொழுது மட்டுமே (இங்கு போர்புரிய) அனுமதியளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மைக்கு மீண்டு வந்துவிட்டது. (நாம் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குத் சொல்லிவிடுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' என்று கூறினார்.
"அதற்கு அம்ர் பின் ஸயீத் என்ன பதிலளித்தார்?' என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் " "அபூஷுரைஹே! உம்மைவிட (இதைப் பற்றி) நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக (புனித நகரமான) மக்கா குற்றவாளிக்கும் மரணதண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடி வந்தவனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடி வந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது'' என்று அம்ர் கூறினார்' என்றேன். (நூல்: புகாரி 104)
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை.
மேற்கண்ட வாசகத்திலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது.
அதாவது மனிதர்கள் மக்காவில் சண்டையிட்டுக் கொள்ளாமல் அதன் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். மாறாக மனிதர்களால் மக்காவிற்கு பாதிப்பே ஏற்படாது என்பதல்ல. அவ்வப்போது சில வரம்பு மீறிய செயல்களைச் செய்து சிலர் மக்காவின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தியும் இருக்கின்றனர்.
68
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا بِشْرٌ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ ابْنِ سِيرِينَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ أَوْ بِزِمَامِهِ قَالَ أَيُّ يَوْمٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَأَيُّ شَهْرٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا لِيُبَلِّغ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ رواه البخاري
அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: (துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்'' என்று கூறிவிட்டு, "(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள். (நூல்: புகாரி 67)
ஒரு முஸ்லிமின் உயிர், உடைமைகள், மானம் ஆகியவை மக்கமா நரகத்தைப் போன்று புனிதமானவை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதை மேற்கண்ட ஹதீஸில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஒரு முஸ்லிமின் உயிர், உடைமை, மானம் புனிதம் என்றால் நாம் பிறமுஸ்லிம்களில் உயிர், உடைமை, மானத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான். மாறாக மனிதர்களால் உயிர், உடைமை , மானத்திற்கு பாதிப்பே ஏற்படாது என்பதல்ல.
அது போன்றுதான் மக்கமா நகரம் புனிதத் தலம் என்றால் அதற்கு என்னென்ன புனிதங்களை மார்க்கம் பேணவேண்டும் என்று கூறியுள்ளதோ அதை நாம் பேணி நடக்க வேண்டும் என்பதுதான். மாறாக மனிதர்களால் மக்காவின் புனிதத் தன்மை பாதிப்பே ஏற்படாது என்பதல்ல.
கஅபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
சிறிய அளவில் ஒரு சிலர் வரம்பு மீறிய காரியங்களை மக்காவில் செய்திருப்பது அது அபய பூமி என்பதற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza