லண்டன்:பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேயர் நினைத்திருந்தால் 2003-ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பை தவிர்த்திருக்கலாம் என்று முன்னாள் ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். ஐ.நா பொதுச் செயலாளராக பதவி வகித்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட தனது அனுபவங்களைக் குறித்து எழுதிய நூலை வெளியிடுவதை முன்னிட்டு டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். ஈராக்கை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் இருந்து ஜார்ஜ் w புஷ்ஷை, ப்ளேயர் நினைத்திருந்தால் பின்வாங்கச் செய்திருக்கலாம் என்று அன்னன் கூறினார்.
இருவருக்கும் இடையேயான நெருங்கிய நட்புறவை ப்ளேயர் பயன்படுத்தியிருக்கலாம். சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகவேண்டும். சிரியாவை ஆளும் தகுதியை பஸ்ஸார் இழந்துவிட்டார். இவ்வாறு கோஃபி அன்னன் பேட்டியில் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment