முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை இம்மாதம் 27 ம்தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
முன்னதாக, அரசு நிரலின் படி இம்மாதம் 26 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை என்று நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் பிறை கண்டதில் நாள் வேறுபாடு காரணமாக பக்ரீத் பண்டிகை இம்மாதம் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.
தலைமை காஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஹிஜ்ரி 1433 துல்காயிதா மாதம் 29-ம் (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை துல்ஹஜ் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் காணப்படவில்லை. அதனால் 18-ந் தேதி அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை என்று இஸ்லாமிய சட்டதிட்ட முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈதுல் அத்ஹா (பக்ரீத்) பண்டிகை 27-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும்." என்று கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment