''ஈத்'' என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும். பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனாவாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள். அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
இரு பெரு நாட்கள்
''அல்லாஹ் அவ்விரண்டு (திருவிழாக்களு) க்கும் பதிலாக அவ்விரண்டைவிடச் சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளான். அவை: ஒன்று ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!)மற்றொன்று ஈதுல் ஃபித்ர் ! (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்!) என்று அறிவித்தார்கள் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு தெரிவித்தார்கள். (ஆதாரம் : அபூ தாவூது நஸயீ)
ஈதுல் ஃபித்ர் ரமளான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளாகும். ரமளான் மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது.
ஈதுல் அள்ஹா இறை ஆணைப்படி நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் மகன் இஸமாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பலியிட முன்வந்த இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படும் பெருநாளாகும்.
குர்பானி கொடுக்கப்படுவதால் ''ஈதுல் அள்ஹா'' என்றும் ''குர்பான் ஈத்'' என்றும் எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் ''ஈத் பைராம்'' என்றும், மாட்டை அறுத்துப் பலியிடுவதால் ''பகர் ஈத்'' (பக்ரீத்) என்றும் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.
பெருநாளை எவ்வாறு கொண்டாடுவது ?
நோன்புப் பெருநாளுக்கும், ஹஜ்ஜுப் பெருநாளுக்கம் ஒரே விதிகள் தான்! என்றாலும் இரண்டிலும் சிறிது வேறுபாடுகள் உள்ளன. இரு பெருநாட்களைப் பற்றியும் அறிவது அவசியமாகும்.
1. பெருநாளன்று ஒவ்வொரு முஸ்லிமும் குளித்துப் புத்தாடை புனைவது ஸுன்னத்தாகும். ஆடை அணிவதில் ஆடம்பரம் கூடாது.
தொழுகைக்குச் செல்லு முன் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குளித்துவிட்டுச் செல்வார்கள். (அறிவிப்பவர்: நாஃபிஹ் ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம்: முவத்தா. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் ஒவ்வொன்றையும் தவறாது கடைபிடிக்கும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈதுப்பெருநாள் தொழுகைக்குப் புறப்படுமுன் குளிப்பார்கள். அவர்கள் இரு பெருநாட்களுக்கும் ஆடைகளில் மிக அழகான ஆடையை உடுத்துபவர்களாக இருந்தார்கள். என இப்னுல் கையிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். (ஸாதுல் மஆத் 1-442)2. ஆண்கள் நறுமணம் பூசிக்கொள்வது நபிவழியாகும்.
3. பெண்கள் புத்தாடை அணியலாம். ஆனால் நறுமணம் போன்ற வாசனைத் திரவியங்கள் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.4.
பெண்களும் பெருநாள் தொழுகைக்காக ''ஈத்காஹ்'' என்னும் மைதானம் சென்று தொழுது வரவேண்டும். அவர்கள் ஆண்களுடன் கலக்காது தனியாக ஒதுங்கிச் செல்லவண்டும்.
5. பெருநாள் தொழுகை ஸுன்னத் முஅக்கதா
பெருநாள் தொழுகை ஸுன்னத் முஅக்கதா- வலியுறுத்தப்ட்ட ஸுன்னத்தாகும். இது வாஜிப்-கட்டாயத்தொழுகை என்றும் சில இமாம்கள் கூறுகின்றனர். எதுவாயினும் இது முஸ்லிம்கள் நிறைவேற்றவேண்டிய ஒரு முக்கியமான தொழுகையாகும். ஜாபிர் இப்னு ஸமூரா ரளியல்லாஹு அன்ஹு ஜாபிர் இப்னு ஸமூரா ரளியல்லாஹு அன்ஹு இதை தவறவிடாது தொழுவதற்கு ஆண் பெண் இருபாலரும் முக்கியத்துவம் வழங்கவேண்டும்.
6. பெண்கள் சிறுவர்களின் மீதும் கடமை
1. மாதவிடாய்,பிள்ளைப்பேறு, இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள் கூட பெருநாள் தொழுகை நடை பெறும் முஸல்லா-ஈத்காஹ்- திடலுக்கு வருகை தந்து பங்கேற்பதும் அங்கே நடைபெறும் குத்பாப் பேருரையைக் கேட்பதும் ஸுன்னத்தாகும். இவர்கள் தொழாமல் அங்கே அமர்ந்திருக்கவேண்டும்.
உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''பருவமடைந்த பெண்களையும்,மாதவிலக்கான பெண்களையும் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் துஆவிலும் கலந்து கொள்வதற்காக இரு பெருநாட்களின் தொழுகை(திடலு)க்கு அனுப்பி வைக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆனால் மாதவிலக்கான பெண்கள்,தொழும் இடத்தில் (சற்று விலகி) ஓரமாக இருக்கவேண்டும்.'' (ஆதாரம்: புகாரி-974, முஸ்லிம்)2.பெருநாள் தொழுகைகளுக்கு சிறுவர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும். நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சிறுவராக இருக்கும் போது பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புகாரி-975)
7. தொழுத பிறகு உண்ணுவது
நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் போது பேரீத்தம் பழம் போன்ற உணவுகளை உண்டு விட்டுச் செல்வதும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் போது எதுவும் உண்ணாமல் செல்வதும் ஸுன்னத்தாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாளன்று சாப்பிடாமல் (பெருநாள் தொழுகைக்காகச்) செல்ல மாட்டார்கள். ஈதுல் அள்ஹா பெருநாளில் தொழாதவரை சாப்பிடமாட்டார்கள் என இப்னு புரைதா தன் தந்தையின வாயிலாக அறிவிக் கிறார்கள். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி,இப்னு ஹிப்பான்)
8. தக்பீர் சொல்லுவது!
ஆண்கள் சப்தமாக தக்பீர் சொல்லுவதும் பெண்கள் மெதுவாக தக்பீர் சொல்லுவதும் ஸுன்னத் நபிவழியாகும்.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருநாள் அன்று தமது வீட்டை விட்டுப் புறப்படுவதிலிருந்து தொழுமிடம் வரும் வரை தக்பீர் சொல்பவர்களாக இருந்தார்கள்'' என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.தக்பீரை கூட்டாக -கோரஸாக- சப்தமிட்டுக் கூறுவதற்கு நபி மொழிகளில் எந்த ஆதாரமும் இல்லை. நபிகளாரின் காலத்திலோ அவர்களின் பிறகு நல்லாட்சி புரிந்த ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் காலத்திலோ,அதன்பிறகோ அவ்வாறு கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
நோன்புப் பெருநாளின்போது பிறை பார்த்த இரவிலிருந்து பெருநாள் அஸர் வரை தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.
ஹஜ்ஜுப் பெருநாளின் போது பிறை ஒன்பது பஜ்ரிலிருந்து 13 அஸர் வரை தக்பீர் கூறுவது சுன்னத்தாகும்.பிறை ஒன்று முதல் 13 அஸர் வரை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தக்பீர் கூறுபவர்களாக இருந்தார்கள். எனவே ஒன்று முதல் 13 அஸர் வரை தக்பீர் சொல்லலாம்.
(தொடரும் ...)
0 கருத்துரைகள்:
Post a Comment