பியுனோஸ் எயர்ஸ்:அர்ஜென்டினா நாட்டில் தற்போது ஓட்டுப் போடும் வயது 18 ஆக இருக்கிறது. இதை 16 ஆகக் குறைத்து அந்நாட்டின் தலைமை ஆட்சிக் குழுவில் (செனட் சபையில்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் ஓட்டளித்தனர். 2 உறுப்பினர்கள் ஓட்டெடுப்பைப் புறக்கணித்தனர்.
இதனை அடுத்து இத்தீர்மானம் அடுத்த மாதம் பாராளுமன்ற கீழ் சபையில் கொண்டு வந்து நிறைவேறியதும் சட்டம் அமுலுக்கு வரும்.
அந்த நாட்டில் விரைவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இதில் இளைஞர்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கத்தில் இந்தப் புதிய சலுகையை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் கொண்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment