Thursday, September 27, 2012

கூகுள் உயரதிகாரி இன்று கைது: YOU TUBE-ல் இருந்து வீடியோவை நீக்காததால்!


கூகுள் நிறுவன பிரேசில் நாட்டு கிளையின் அதி உயர் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு வீடியோவை YouTube-ல் இருந்து நீக்காததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமை அவதூறு செய்து எடுக்கப்பட்டுள்ள அமெரிக்க திரைப்படத்தின் ட்ரெயிலரை தடை செய்துள்ள பிரேசில் நாட்டு கோர்ட், அந்தப் படத்தின் ட்ரெயிலரை அடுத்து வரும் 10 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என YouTubeக்கு நேற்று ஆர்டர் போட்டது. பிரேசில் நாட்டின் சாவோ போலோ நகரில் உள்ள மாநில நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது.


பிரேசில் நாட்டில், இந்த நகரத்தில்தான் பெரும் எண்ணிக்கையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் வசிக்கிறார்கள். இங்குள்ள நேஷனல் இஸ்லாமிக் யூனியன் என்ற அமைப்பு,  YouTubeக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இது.

அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட மறு தினம், கூகுள் நிறுவன பிரேசில் நாட்டு கிளையின் அதி உயர் அதிகாரி ஃபபியோ ஜொசே சில்வா (மேலே போட்டோவில் உள்ளவர்) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் குறிப்பிடப்படும் வீடியோ, பிரேசில் நாட்டு மேயர் வேட்பாளர் ஒருவரை அவதூறு செய்யும் விதமாக வெளியிடப்பட்ட வீடியோ. மேயர் தேர்தலில் போட்டியிடும் இந்த வேட்பாளர், பொதுக்கூட்டம் ஒன்றில் ஏடாகூடமாக பேசிய வீடியோ இது. அதை அவருக்கு எதிரான பிரசாரமாக YouTube உறுப்பினர் ஒருவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

கூகுள் (பிரேசில்) நிறுவனம், “வாக்காளர்கள் இன்டர் நெட்டை சுதந்திரமாக உபயோகித்து, சரியான வேட்பாளருக்கு வாக்களிக்க உதவுவது எமது சமுதாய கடமை என்ற வகையில், குறிப்பிட்ட வீடியோவை நீக்க முடியாது” என்று கூறியிருந்தது.

தற்போது, கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய அதிகாரி இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், சர்ச்சைக்குரிய அமெரிக்க திரைப்படத்தை அடுத்த 9 நாட்களுக்குள் நீக்காவிட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் கிளை நிறுவனமான YouTube என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza