Friday, September 28, 2012

அரபுலக புரட்சியை அரசியல் ஆதாயத்திற்காக ஒபாமா மோசடிச் செய்கிறார்! – ஜூலியன் அஸாஞ்ச்!


Julian Assange
ஐ.நா:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அரபுலக புரட்சியை தனது ஆதாயத்திற்காக மோசடிச் செய்வதாக விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பல நாடுகளின் பிரதிநிதிகளிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக அஸாஞ்ச் உரையாற்றினார்.
அஸாஞ்ச் தனது உரையின் பெரும்பகுதியிலும் ஒபாமா கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நாவில் ஆற்றிய உரையை விமர்சித்தார்.அரபுலக புரட்சியை ஆதரித்த ஒபாமா, சர்ச்சைக்குரிய திரைப்படத்தை கருத்து சுதந்திரத்தின் பெயரால் நியாயப்படுத்துவதை அஸாஞ்ச் கண்டித்தார்.

ஏகாதிபத்தியவாதிகளான அரபுல ஆட்சியாளர்களை காலங்காலமாக ஆதரித்துவந்த அமெரிக்கா, அவர்களுக்கு எதிராக நடக்கும் புரட்சியை ஆதரிப்பதாக கூறுவது திமிரும், புரட்சியின் போது உயிர்தியாகம் புரிந்தோரை அவமானப்படுத்துவதாகும் என்று அஸாஞ்ச் கூறினார்.அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய அனாலிஸ்ட் ப்ராட்லி மானிங்கின் உதவியுடன் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் அரபுலக வசந்தத்திற்கு உதவியதாக அஸாஞ்ச் தெரிவித்தார்.
அமெரிக்காவில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் மானிங்கிற்கு கருத்து சுதந்திரத்தின் எவ்வித உரிமைகளையும் வழங்காத ஒபாமா, சர்ச்சைக்குரிய திரைப்படத்தை கருத்து சுதந்திரம் என்றுக்கூறி நியாயப்படுத்துகிறார் என்று அஸாஞ்ச் விமர்சித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza