Friday, September 28, 2012

கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியில் க‌ரை ஒதுங்கும் அரிய‌ வ‌கை க‌ட‌ல்வாழ் உயிர‌ன‌ங்க‌ள்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில‌ ஆண்டுகளாக‌ திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் ஏராளமான கடல்பசு, போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அவற்றை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய கடல் பகுதியில் மிகுந்த‌ கடல் வளங்கள் நிறைந்து படர்ந்துள்ள அற்புதங்கள், மன்னார்வளைகுடாவில் உள்ளன. தமிழக மீன் உற்பத்தியில் 35 சதவீதம் மீன் உற்பத்தி, மன்னார் வளைகுடா கடலில் இருந்தே கிடைக்கிறது . கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌ல் ப‌குதியும் ம‌ன்னார் வ‌ளைகுடாவை சேர்ந்த‌தாகும் ம‌ன்னார் வ‌ளைகுடாவில் 21 தீவுகளும் ஏராள‌மான‌ பவளப்பாறைகளும் உல‌கின் அரிவ‌கை உயிர‌ன‌ங்க‌ளும் இங்கு உள்ள‌து. கடல் உயிரின பெருக்கத்திற்கு ஆதாரமான பவளப்பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் ஏராளமான உயிரினங்கள் அதிக‌ள‌வில் உள்ள‌து. இதில், அரிய வகை உயிரினங்களான பவள உயிரினங்கள், கடல் பசு, கடல் ஆமைகள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.பாலூட்டி இன‌ங்க‌ளான‌ திமிங்க‌ல‌ங்க‌ல்,டால்பின்க‌ள் அதிக‌ள‌வில் உள்ள‌து அழிந்து வரும் இவ்வகை உயிரினங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இநிலையில் க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளாக‌ கீழ‌க்க‌ரை,ம‌ண்டப‌ம்,ஏர்வாடி உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளி க‌ட‌ல்ப‌சு,டால்பின்,திமிங்க‌ல‌ங்க‌ள்  இற‌ந்து க‌ரை ஒதுங்குகின்ற‌ன‌ர்.ச‌மீப‌த்தில் கீழ‌க்க‌ரை கட‌ற்க‌ரையில் அரிய‌ வ‌கை டால்பின் க‌ரை ஒதுங்கிய‌து.


இதுகுறித்து கடல் ஆர்வலர் சுல்தான் என்ப‌வ‌ர்  கூறுகையில், 
அரியவகை மீன்கள் இற‌ந்து க‌ரை ஒதுங்குவ‌த‌ற்கான‌  காரணத்தை கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.டால்பின்,க‌ட‌ல் ப‌சு போன்ற‌வை  இப்ப‌குதியில் அதிக‌ள‌வில் இருப்ப‌தால் இது போன்ற‌ உயிர‌னங்க‌ளின் முக்கிய‌த்துவ‌ம் குறித்து விழிப்புண‌ர்வு பிர‌ச்சார‌ங்க‌ளை  அர‌சாங்க‌ம் இப்ப‌குதியில் மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்.

கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,
ஆழம் குறைந்த பகுதியில் சிக்கி பாறைகளில் மோதும் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்க வாய்ப்புள்ளது.
இதுதவிர அரிய கடல் வாழ் உயிரினங்கள் வெளிநாடுகளில் உணவுக்காகவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப் படுவதால் சமீப காலமாக இவைகள் சட்டத்திற்கு புறம்பாக அதிகளவில் கடத்தப்படுகின்றன. இத‌னால் கால‌போக்கில் ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதியில் அரிய‌ வ‌கை உயிர‌ன‌ங்க‌ளை காண்ப‌து அரிதாகும் என்றனர்.






0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza