Thursday, September 13, 2012

குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்தியா முதலிடம்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!


உலகம் முழுவதும் தினமும் 5 வயதுக்குட்பட்ட 19 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. யுனிசெப் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. 


உலகில் 50 சதவீத குழந்தை இறப்புகள் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகளிலும் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. 



2011ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 15.55 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகள் இறப்பு அதிகம் உள்ள டாப்-10 நாடுகளில் இந்தியாவைத் தொடர்ந்து நைஜீரியா(7.65 லட்சம்), காங்கோ (4.65 லட்சம்), பாகிஸ்தான் (3.52 லட்சம்), சீனா (2.49 லட்சம்), எத்தியோப்பியா (1.94 லட்சம்) ஆகிய நாடுகள் உள்ளன. 



இந்தோனேசியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் தலா 1.34 லட்சம் குழந்தைகளும், உகாண்டாவில் 1.31 லட்சம் குழந்தைகளும், ஆப்கானிஸ்தானில் 1.28 லட்சம் குழந்தைகளும் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza