Sunday, September 16, 2012

சிறையில் உண்ணாவிரதம்: மரணத்தின் விளிம்பில் ஃபலஸ்தீனர்கள் – ரெட்க்ராஸ்!

3 Palestinian hunger strikers risk death
டெல்அவீவ்:சட்டவிரோத சிறையில் இருந்து விடுவிக்க கோரி இஸ்ரேல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் 3 ஃபலஸ்தீனர்கள் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும், இதுக்குறித்து அதிகாரிகள் கண்ணைத் திறக்கவேண்டும் என்றும் ரெட் க்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸமர் பரக், ஹஸன் ஸஃபாதி, அய்மன் ஷரானிஹ் ஆகியோர் இஸ்ரேலின் அட்டூழியத்தை எதிர்த்து பல வாரங்களாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விசாரணை கூட நடத்தாமல் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்ட தங்களை இனிமேலாவது விடுதலைச் செய்ய வேண்டும் என்பது ஃபலஸ்தீனர்களின் கோரிக்கையாகும் என்று ரெட் க்ராஸின் இஸ்ரேல் பிரதிநிதிகளின் தலைவர் ஜுவான் பெர்டோ ஸ்கேரர் கூறியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் மூன்று பேரின் ஆரோக்கிய நிலையைக் குறித்து ரெட் க்ராஸ் மிகவும் கவலையடைந்துள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காண இஸ்ரேல் அதிகாரிகள் தயாராகவில்லை எனில் அவர்கள் மரணத்திற்கு கீழ்படிவார்கள் என்று ஸ்கேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உணவும், மருந்தும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிப்பது சிறைக் கைதிகளின் உரிமை என்றும், இதில் இஸ்ரேல் தலையிடக் கூடாது என்று கூறும் ஸ்கேரர், போராடும் உரிமையை அங்கீகரித்துக் கொண்டே பிரச்சனைக்கு தீர்வு காண இஸ்ரேல் தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விசாரணை இல்லாமல், குற்றம் சுமத்தாமல் 1500க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் பல வருடங்களாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் சட்டப்படி குற்றம் சுமத்தாமல் ஒருவரை 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்க கூடாது. ஆனால் தாம் இயற்றிய சட்டத்தையே இஸ்ரேல் மீறி பல வருடங்களாக ஃபலஸ்தீன் கைதிகளை சிறையில் அடைத்துள்ளது. முன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபலஸ்தீன் கைதிகளில் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர். சர்வதேச அழுத்தம் காரணமாக இவர்களை இஸ்ரேல் விடுதலைச் செய்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza