வாஷிங்டன்:இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப் படுத்தும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்டனப் பேரணி நடைபெற்றது. அமெரிக்க முஸ்லிம் காங்கிரஸ் இந்த பேரணிக்கு ஏற்பாடுச் செய்தது.
மதங்களை நிந்திப்பதை அங்கீகரிக்க இயலாது என்றும், அன்பும், அமைதியும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக சவூதி அரேபியாவிலும் கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. கிழக்கு மாகாணமான கத்தீஃப், ஒம்ரான், தம்மாம் ஆகிய இடங்களில் அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கண்டனப் பேரணிகள் நடந்தன.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறிய பாகிஸ்தானிலும் நேற்று கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பாகிஸ்தான் போலீஸ் 6 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவுச் செய்துள்ளது.
பங்களாதேஷில் எதிகட்சிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பால் நாடு ஸ்தம்பித்தது. பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், அரசு-தனியார் அலுவலகங்கள், கடை-நிறுவனங்கள் பூட்டிக்கிடந்தன.
0 கருத்துரைகள்:
Post a Comment