Tuesday, September 11, 2012

எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் சாலை மறியல் போராட்டம்


கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும்,இடிந்தகரை பகுதியில் இருந்து காவல்துறையினர் உடனடியாக வெளியேற வலியுறுத்தியும்,போராட்டக் குழுவினரோடு முதல்வர் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியும், கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி (10-05-2012)மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தியது.

நடைப்பெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முஹம்மது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை மாவட்டத் தலைவர் அமீர் ஹம்சா, தென் சென்னை மாவட்டத் தலைவர் முஹம்மது உசேன், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சாலை மறியலைத் தொடர்ந்து 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza