இந்தியா வந்துள்ள பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அப்போது இருநாட்டு பிரச்சினைகள், பிராந்திய வளர்ச்சித் திட்டங்கள், குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் வளர்ச்சிகள் பற்றி இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இந்த சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாலஸ்தீனத்திற்கு உதவி செய்வது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாகும். கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீன ஐக்கிய அரசை உருவாக்க போராடும் மக்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்.
மேலும் பாலஸ்தீனத்தின் நிதி தேவைகளுக்கு உதவும் வகையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். பாலஸ்தீனம் யுனெஸ்கோவின் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முக்கிய பங்காற்றியது.
இதேபோல் ஐ.நா.வில் முழு உறுப்பினர் அந்தஸ்தைப் பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டு வரும் பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சமாதான பேச்சுவார்த்தையை மறுபடியும் தொடங்கி, இரு நாடுகளுக்குமிடையே நிலவும் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


0 கருத்துரைகள்:
Post a Comment