Wednesday, September 19, 2012

முஹம்மது நபியை அவர்கள் ஏன் வெறுக்கிறார்கள்...?

சமீபத்தில் இஸ்லாத்தின் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி ஒருவன் திரைப்படம் தயாரித்த விவகாரத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் கொதித்தெழுந்து அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அரசாங்கமோ இது தொடர்பாக கூறும்போது "எங்களது நாட்டில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது.

 யார் வேண்டுமானாலும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடலாம். அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் எனவே இது தொடர்பாக அமெரிக்க அரசு தலையிடாது எனவும் அவ்வாறு திரைப்படம் தயாரித்தவனை தண்டிக்கவியலாது" எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ள அதே சமயம் உலகில் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை மன்னிக்க மாட்டோம் எனவும் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவந்து தண்டிப்போம் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.
பிறரை இழிவுபடுத்துவதற்கும், மத மோதல்களை உருவாக்குவதற்கும், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதற்கும் "கருத்து சுதந்திரம்" என்ற வாக்கியத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான யுத்தம் சமீபகாலமாக தொடர்கிறது. முஹம்மது நபி தொடர்பாக வெளியிட்ட திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவர்களையும் நோக்கி நாம் சில கேள்விகளை முன்வைக்க வேண்டும்.

"உம்முடைய தாய் ஒரு விபச்சாரி, உன்னுடைய தந்தை ஒரு பெண் பித்தன்" என்று ஒருவரை நோக்கி கேட்கப்பட்டால் அவனுடைய பதில் எவ்வாறு இருக்கும்...?

"சார்.... என்னிடம் இவ்வளவு அசிங்கமாக பேசாதீங்க. நீங்க பேசுறது ரொம்ப அவமரியாதையா இருக்கு! நான் ரொம்ப நல்ல குடும்பத்தைச்சார்ந்தவன். எனவே ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிறேன் இது போன்ற வார்தைகளை சொல்லாதீங்க! அப்படி சொன்னீங்கன்டா போலீஸ்ல புகார் கொடுத்து உங்கள  கோர்டுக்கு இழுப்பேன்....!"

இப்படி நூற்றில் ஒருவர் கூட பதில் கூறமாட்டார். அதே சமயம் தனது தாயையும் தந்தையையும் இழிவுபடுத்திய நபரின் கன்னத்தில் பளார்....! என ஒரு அரையைவிட்டிருப்பார் (குறைந்த பட்சம்) இது தான் மனித இயல்பு
ஷாம் பாசிலி 13 நிமிட வீடியோவை தயாரித்தான் என்பதை விடுங்கள். பாசிலி போன்று நூற்றுக்கணக்கானவர்கள், நூற்றுக்கணக்கான வீடியோக்களை தயாரித்தாலும் ஒரு முஸ்லிம் கூட இயேசுவை இழிவுபடுத்தியோ அல்லது கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தியோ வீடியோ தயாரித்ததில்லை. சல்மான் ருஷ்டி போன்றவர்கள் "சாத்தானிய வரிகள்" என முஸ்லிம்களின் புனித நூல் மீது அவதூறுகளை அள்ளி தெளித்தாலும் ஒரு முஸ்லிம் கூட இயேசுவையோ, அல்லது மரியாளையோ இழிவுபடுத்தி நூல்கள் எழுத எண்ணியது கூட கிடையாது.


ஜைலாந்த் போஸ்டன் போன்றவர்கள் முஹம்மது நபியை தீவிரவாதியாக சித்தரித்து ஆயிரக்கணக்கான கார்டூன் படங்களை வரைந்தாலும் இவ்வுலகில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களில் ஒருவர் கூட இயேசுவை தவறாக சித்தரித்து கார்டூன் படம் வரைந்ததில்லை. வரலாற்று பார்வையில் இதுவரை எந்த முஸ்லிமாவது பிற மதங்களை புண்படுத்தும் வகையில் அவர்களது வேத நூல்களை இழிவுபடுத்தும் வகையில் ஏதாவது ஒரு நூலையாவது எழுதியதுண்டா? நிச்சயமாக இல்லை! காரணம் மோசேவும், இயேசுவும் இறைவனின் தூதர்கள் என ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கை கொண்டுள்ளான். இன்னும் சொல்லப்போனால் இந்துக்களின் சில கடவுள்கள் கூட இறைவனின் தூதராக இருந்திருக்க கூடும் என்றே கருதுகிறார்கள். எனவே தான் முஹம்மது நபிக்கு வழங்குகின்ற கண்ணியத்தையும் மரியாதையையும் போன்று அவர்களுக்கும் வழங்குகிறார்கள்.


முஹம்மது நபியின் போதனைகள் மட்டுமே இன்றுவரை முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். எனவே தான் அவரை மட்டும் முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். இதுவே இஸ்லாத்திற்கும் பிற மதங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடாகும். மோசேக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதத்தின் மீதும், இயேசுவுக்கு அருளப்பட்ட இஞ்ஜீல் வேதத்தின் மீதும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட குர்ஆனை மட்டுமே பின்பற்றி வருகிறார்கள். காரணம் குர்ஆன் மட்டுமே இன்றுவரை திருத்தப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுவே இஸ்லாத்திற்கும் பிற மதத்திற்குமிடையே உள்ள வேறுபாடுகள்.



தற்போது எதிர்புகள் என்ற பெயரிலே வெறித்தனமான தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் சில கருப்பு ஆடுகள் இருக்கின்றது. அதே போன்று முட்டாள்தனமாக மதங்களை பின்பற்றும் சிலர் வெறுப்பிற்குரிய காரியங்களில் ஈடுபடுகின்றனர். லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப்பட்டதும் இன்னும் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதும் இதுபோன்ற வன்முறையாளர்களால்தான். இது நிச்சயமாக கண்டிக்கத்தக்கதாகும்.

தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு திரைப்படம் மட்டும் காரணமல்ல, மாறாக மேற்கத்திய நாடுகளான அதிலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளின் இரட்டை நிலையே இதுபோன்ற வன்முறைகளுக்கு காரணம் என்பதை திட்டவட்டமாக கூறமுடியும். அனைவரும் விதிமுறைப்படி நடக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பும். ஆனால் அதே சமயம் எல்லா விதிமீறல்களிலும் அமெரிக்கா ஈடுபடும். அமெரிக்க முன்னால் அதிபர் மார்டின் லூதர் கிங் கூறும்போது " அநீதி எங்கு நடைபெற்றாலும் அது நீதிக்கெதிரான அச்சுறுத்தலாகவே இருக்கும்". இதனை அவர்கள் மறந்துவிட்டார்கள். எல்லாவிதமான வன்முறைகளிலும் ஈடுபடுவார்கள். ஆனால் பிறரை அமைதியாக நடக்க வேண்டுமென நிர்பந்திப்பார்கள். அணு ஆயுதங்களை அளவிற்கு அதிகமாக சேர்த்து வைப்பார்கள், ஆனால் பிற நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தற்போது கொல்லப்பட்டுள்ள 4 அமெரிக்க தூதர்கள் மீது பரிதாபம் ஏற்படுத்தும் விதம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பார்கள். அதே சமயம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்களை பெண்கள் குழந்தைகள் உட்பட ஆஃப்கானிஸ்தானில் கொன்று குவிப்பார்கள்.

முஹம்மது நபியை  பாரம்பரியமாகவே யூதர்களும், கிறிஸ்தவர்களும் வெறுத்து வருகிறார்கள். காரணம் முஹம்மது நபி ஆபிரஹாமின் இரண்டாவது மகனான இஸ்ஹாக்கின் வம்சாவழியில் பிறக்காததால்தான். மோசேவும், இயேசுவும் இஸ்ஹாக்கின் வம்சாவழியில் பிறந்தவர்கள். எனவே கிறிஸ்தவர்களும், யூதர்களும் இறுதி தூதர் தங்களது வம்சாவழியில் இருந்துதான் தோன்றுவார்கள் என எண்ணிக்கொண்டிருந்தார்கள். வரலாற்றை பார்க்கும்போது பல யூதர்களும், கிறிஸ்தவர்களும் இதனை தெரிவித்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

கடந்த 1400 ஆண்டுகளாக முஹம்மது நபிக்கு எதிராக பல்லாயிறக்கணக்கான புத்தகங்களை மேற்கத்திய நாடுகளைச்சேர்ந்தவர்கள் எழுதியுள்ளார்கள். முஹம்மது நபியின் கண்ணியத்தையும் மரியாதையையும் குறைத்துவிட்டாலே இஸ்லாத்தை வென்றுவிடலாம் என்ற நோக்கில் அவ்வாறு செயல்பட தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் தற்போது தங்களுடைய மதத்தையே சீகுழைத்தார்கள். இயேசுவுடைய தாய் மரியாளை விபச்சாரியாகவும் ( இறைவன் பாதுகாக்கவேண்டும்), இயேசுவை விபச்சாரியின் மகனாகவும் சித்தரித்து திரைப்படங்களை தயாரித்தார்கள். அதற்கும் "கருத்துச்சுதந்திரம்" என்ற சாயத்தை பூசி மகிழ்ந்தனர். ஆனால் முஸ்லிம்கள் எக்காரணத்தைக்கொண்டும் இது போன்ற செயல்களை  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். முஸ்லிம்கள் முஹம்மது நபியை தங்களது உயிரைவிட புனிதமாக நேசிக்கிறார்கள். இப்பேற்பட்ட உன்னத நம்பிக்கையை கிறிஸ்தவ மற்றும் மேற்கத்தியவாதிகளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர்கள் மோசேவையும், இயேசுவையும் சரியாக பின்பற்றுவதில்லை அதன் காரணமாகவே முஹம்மது நபியை வெறுக்கிறார்கள். அவர்கள் குர்ஆனை வெறுக்கிறார்கள், காரணம் அவர்களிடம் பைபிளின் மூல ஆதார நூல்கள் இல்லை.

உலகில் இரண்டு விதமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஒன்று பேசிலி போன்ற முட்டாள்கள். அவர்கள் இறைதூதர் முஹம்மது நபியை புரிந்துகொள்ளவில்லை. மற்றொன்று மைக்கேல் ஹார்ட் போன்றவர்கள். மைக்கேல் ஹார்ட் தான் எழுதிய "தி ஹண்ரட்" (உலகில் தலை சிறந்தவ‌ர்கள்) என்னும் புத்தகத்தில் முஹம்மது நபிக்கு முதல் இடத்தை வழங்கியுள்ளார். முஹம்மது நபியவர்கள் எல்லா துறைகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என அவர் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய சமூகத்தில் கூட இருவிதமானவர்கள் வாழ்கின்றார்கள். அதில் ஒரு சாரார் அத்திரைப்படத்திற்கு சம்பந்தமே இல்லாத அமெரிக்கர்களை கொன்றுள்ளார்கள். மறுசாராரோ முஹம்மது நபியின் வாழ்க்கை சரித்திர புத்தகத்தை பிறருக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். முஹம்மது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை உலகத்தில் உள்ள அனைவரிடமும் கொண்டு சேர்க்க சரியான சந்தர்பம் கிடைத்துள்ளது.

ஆரோக்கியமான விவாதங்களை இஸ்லாம் வரவேற்கிறது. முஹம்மது நபிக்கு எதிராக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தும் அவற்றிற்கு எதிராக முஸ்லிம்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தியதில்லை. ஆனால் ஆபாசமான வார்த்தைகளை கொண்டு தாக்கும் போது யாராலும் அதனை எந்தவொரு முஸ்லிமும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். மதமோதல்களை உருவாக்க நினைப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மனிதல் உலகில் வாழ முடியும்.

குறிப்பு: 

மோசே - மூஸா (அலை)
இயேசு - ஈஸா  (அலை)
ஆபிரஹாம் - இபுராஹிம் (அலை)
இஸ்ஹாக் - இஸ்ஹாக் (அலை)
மரியாள் - மரியம் (அலை)

அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமுன் உண்டாகட்டும்.

நன்றி: CHENNAI POPULAR FRONT .BLOGSPOT.COM

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza