ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் அப்துல் காதிர் ஆலிம் மஸ்ஜித் அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் பாசிச கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டது. இதில் மஸ்ஜித் சேதமடைந்துள்ளது.
ராமநாதபுரம், மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதி நகர் பகுதியில் அப்துல் காதர் ஆலிம் பள்ளிவாசல் உள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை அதிகாலையில் மர்மக் கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தலைமறைவாகி விட்டது. இதில், பள்ளிவாசலின் முன்புறத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
தகவலறிந்து ஏராளமான முஸ்லிம்கள் பள்ளிவாசல் முன்பு திரண்டனர். சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். சம்பவ இடத்தில், ராமநாதபுரம் வட்டாட்சியர் க. அன்புநாதன், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ரவி, டி.எஸ்.பி. முரளீதரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, பள்ளிவாசல் இமாம் செய்யது அக்பர் அளித்த புகாரின்பேரில், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, இன்னும் ஓரிரு தினங்களில் கைது செய்துவிடுவதாக, காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கூடியிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment