ஐ.நா:அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் ரேய்ச்சல் கோரியின் கொலையில் இஸ்ரேல் ராணுவத்திற்கு பங்கில்லை என்று கூறிய நீதிமன்ற தீர்ப்பை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. இத்தீர்ப்பின் மூலம் நீதி குழித் தோண்டி புதைக்கப்பட்டதாக ஃபலஸ்தீனில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பிரதிநிதி ரிச்சார்ட் ஃபாக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க மனித உரிமை போராளியான ரேய்ச்சல் கோரியை இஸ்ரேல் ராணுவம் ஃபலஸ்தீனில் புல்டோஸரை ஏற்றி கொடூரமாக கொலைச் செய்தது. ஃபலஸ்தீன் மக்களின் வீடுகளை இஸ்ரேல் ராணுவம் இடிக்க முயன்றதை ரேய்ச்சல் தடுத்ததுதான் இக்கொலைக்கு காரணம்.
ரேய்ச்சல் கோரி தானே முன்வந்து மரணத்தை ஏற்று வாங்கினார் என்று ஹைஃபா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தனது அநீதமான தீர்ப்பில் கூறியிருந்தார்.
ஆனால், நீதிமன்றம் நேரடி சாட்சிகளை புறக்கணித்துவிட்டதாக கூறிய ரிச்சார்ட் ஃபாக், ரேய்ச்சலை புல்டோஸர் ஓட்டுநரால் காண முடியவில்லை என்ற கருத்தைக் குறித்து கேள்வி எழுப்பினார். புல்டோஸரின் ஓட்டுநர் காணும் வகையில் ஆரஞ்சு நிறத்திலான ஆடையை கொலைச் செய்யப்படும் வேளையில் ரேய்ச்சல் கோரி அணிந்திருந்தார் என்றுஃபாக் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment