அஹ்மதாபாத்:நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலையில் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஒரு காலத்தில் நரேந்திர மோடியின் வலதுகரமாக செயல்பட்டவர்.
கைனோகாலஜிஸ்டாக பணியாற்றி அரசியலில் களமிறங்கியவர் நரோடாபாட்டியாவில் இருந்து 3 தடவை பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ ஆனார். 2007-ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக பதவியேற்றார். கலவரத்தில் தொடர்பு இருப்பதால், அவரை அமைச்சராக நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், நரேந்திரமோடி அதனை புறக்கணித்து அவரை அமைச்சராக தொடர அனுமதித்தார். ஆனால், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மாயா கோட்னானியை கைது செய்ததன் மூலம் 2009-ஆம் ஆண்டு , அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மாயா கோட்னானியை, தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. விசாரணைக்கு ஒத்துழைக்க துவக்கத்தில் மறுத்த மாயா கோட்னானி, 2009-ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றத்தில் இருந்து முன் ஜாமீன் மனுவைப் பெற்றார். சிறப்பு புலனாய்வுக்குழு முன் ஜாமீனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை அணுகியது. உயர்நீதிமன்றம் கோட்னானிக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்துச் செய்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மாயா கோட்னானிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் அனுமதித்தது.
கடந்த தேர்தலில் 1,85,000 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை அவர் பெற்றார். இதன் மூலம் எவ்வளவு தூரம் நரோடாபாட்டியா வகுப்புவாத வெறியில் ஊறித்திளைத்துள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஹிந்துக்களின் உணர்வுகளை தூண்டியவர் என்று மாயா கோட்னானி மீது குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சம்பவம் நிகழ்ந்த 2002-ஆம் ஆண்டு மாயா, அமைச்சராக இல்லை என்று பா.ஜ.க சமாளிக்கும் பொழுது, இனப்படுகொலையை கச்சிதமாக நிறைவேற்றியதற்கு பரிசாக மாயா கோட்னானிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்று காங்கிரஸ் கூறியது.
0 கருத்துரைகள்:
Post a Comment