லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இந்திய தூதரகத்தின் பைகள், ஆல்ட்விச்சில் உள்ள இந்திய தூதரதகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தூதரகத்திற்கு சென்றதும் அவற்றை இறக்கி சரிபார்த்தபோது 4 பைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதில் 3 பைகளில் 6000 விசா ஸ்டிக்கர்கள் இருந்தன. ஒரு பையில் எழுதுபொருட்கள் இருந்தன.
இத்தகவலை கடந்த 3ம் தேதி தூதரக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டார். அன்றைய தினம் மொத்தம் 27 பைகள் தூதரகத்திற்கு வந்து சேர்ந்தன. அதில் 25 பைகளில் 50 ஆயிரம் விசா ஸ்டிக்கர்கள் இருந்தன.
பைகள் திருட்டு பற்றி உடனடியாக இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருட்டு போன விசா ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
மேலும் இது தொடர்பாக லண்டன் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment