Wednesday, August 8, 2012

அமெரிக்காவில் மஸ்ஜித் தீக்கிரை!

US mosque razed in fire
வாஷிங்டன்:அமெரிக்காவில் மிசெளரி மாநிலத்தில் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜித் மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
விஸ்கோன்ஸில் உள்ள சீக்கிய குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்னரே மஸ்ஜித் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாஃப்லின் நகரத்தில் உள்ள மஸ்ஜித் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலானாதாக பி.பி.சி கூறுகிறது.
தீவைப்பு சம்பவம் நிகழ்ந்த வேளையில் மஸ்ஜிதில் ஆட்கள் எவரும் இல்லாததால் பெரும் துயரம் தவிர்க்கப்பட்டது என்று நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாதம் முன்பே இதே மஸ்ஜிதை தீவைத்துக் கொளுத்த முயற்சி நடத்தப்பட்டது. அச்சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க எஃப்.பி.ஐ விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் மஸ்ஜித் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை துவங்கியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza