Wednesday, August 8, 2012

ஊழல்,கறுப்புப் பணத்திற்கு போராடுவதாக வேடம் போடும் ராம்தேவின் 4 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடி அம்பலம்!

Anti-corruption crusader Ramdev a tax evader
புதுடெல்லி:10 ஆண்டுகளுக்கு முன்பு பழுது பார்க்க கூட காசில்லாமல் ஓட்டை சைக்கிளில் திரிந்துவிட்டு யோகாவின் பெயரால் ஆன்மீக மோசடி புரிந்து கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பவர் பாபா ராம் தேவ்.
திடீரென நாட்டின் மீது ஏற்பட்ட கரிசனத்தால் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்காக போராடுகிறேன் பேர்வழி என கூறி தடாலடி ஹைடெக் போராட்டங்களில் இறங்கினார்.

சங்க்பரிவாரின் கைப்பாவையான ராம்தேவ் மீது ஏற்கனவே பல சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில் ராம் தேவ் 4 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி சானலான சி.என்.என் – ஐ.பி.என் சேனல் மத்திய கலால் வரித்துறை இயக்குனரகத்தின் புலனாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பது: “பாபா ராம்தேவ், திவ்ய யோகா மந்திர் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு, 2007 லிருந்து 2011 வரை, உறுப்பினர் சேர்க்கை மூலம், 37.98 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், இதற்கான சேவை வரியான, நான்கு கோடி ரூபாயை, ராம்தேவ் செலுத்தவில்லை. இது தொடர்பாக, கான்பூரைச் சேர்ந்த கலால் வரித்துறை அதிகாரிகள், பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா மந்திர் ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, இந்த அமைப்புகளுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza