சென்னை:பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்த சிறுமி சுருதியின் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது தலைமை நீதிபதி இக்பால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் மேலும் கூறியதாவது, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது. பள்ளி வாகனங்கள் குறித்து புதிய விதிமுறைகளை தமிழக அரசு 2 வாரத்தில் உருவாக்க வேண்டும். அதில் தவறு செய்யும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வழிமுறைகள் இருக்க வேண்டும். புதிய விதிமுறைகளை தமிழக அரசு உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்.
தவறிழைத்த அதிகாரிகள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுமி சுருதி மரணத்தை ஏன் கொலை வழக்காகப் பதிவு செய்யக் கூடாது என்று தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பினார்.
குழந்தையை இழந்த பெற்றோருக்கு சியோன் பள்ளி சார்பில் ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment