Sunday, July 29, 2012

ரோஹிங்கியா முஸ்லிம் கூட்டுப் படுகொலை குறித்து விசாரணை தேவை: ஐ.நா!

un-urges-inquiry-over-rohingya-killings
ஐ.நா:மேற்கு மியான்மரில் கடலோர மாநிலமான ராக்கேனில் அரசு ஆதரவுடன் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்து விசாரணை தேவை என ஐ.நா மனிதஉரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை புத்த சமூகத்தினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுப்பதற்காக அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட ராணுவமே முஸ்லிம்களை குறிவைப்பதாகவும், இது துக்ககரமானது எனவும் ஐ.நா மனித உரிமை கமிஷனின் தலைவர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஐ.நா அகதிகள் விவகார ஏஜன்சியின் அறிக்கையின் படி 80 ஆயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து புலன் பெயர்ந்துள்ளார்கள் என கூறுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக ராணுவத்தின் ஆதரவுடன் நடக்கும் வகுப்புவாத தாக்குதல்கள் குறித்து சுதந்திர ஏஜன்சிகளிடமிருந்து ஏராளமான செய்திகள் மனித உரிமை கமிஷனுக்கு கிடைப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து மோசமான வார்த்தைகளை பிரயோகிக்கும் ஊடகங்களையும், அரசையும் கண்டித்த நவி பிள்ளை, வன்முறைகளை தடுக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மியான்மரில் நிலைமைகளை குறித்து நேரடியாக சென்று ஆராய ஐ.நா பிரதிநிதியை ராக்கேனுக்கு செல்ல அனுமதி அளித்த மியான்மர் அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கது எனினும், இதனால் சுதந்திரமான விசாரணை நடக்காமல் இருக்காது என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அபயம் அளிக்க இயலாது என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் தற்பொழுது 3.5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதி முகாம்களில் வசிக்கின்றார்கள். இவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் சக்தி பங்களாதேஷ் அரசுக்கு இல்லை என ஷேக் ஹஸீனா அல்ஜஸீராவுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza