புதுடெல்லி:அஸ்ஸாமில் வகுப்புவாத கலவரத்தில் அரசு அவசர நடவடிக்கை எடுக்க கோரி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அஸ்ஸாம் மாநில கமிட்டி சார்பாக குவஹாத்தி நகரத்தில் கண்டன பேரணி நடைபெற்றது.
மாநில தலைவர் மவ்லானா ஃஹைருல் அனாம், பொதுச் செயலாளர் மவ்லானா அக்பர் அலி அஹ்மத், மாவட்ட தலைவர் ஆஸம் கான் ஆகியோர் பேரணிக்கு தலைமை தாங்கினர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை திரும்ப கொண்டுவர அவசர நடவடிக்கையை மேற்கொள்ளுதல், அரசு நடவடிக்கைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுதல், கொலைச் செய்யப்பட்டவர்கள் மற்றும் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10லட்சம் இழப்பீடு வழங்குதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநர், முதல்வர், உள்துறை அமைச்சர், போலீஸ் தலைவர் ஆகியோருக்கு இமாம்ஸ் கவுன்சில் அளித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment