Thursday, February 2, 2012

ஈரான் சுற்றுப்பயணம் வெற்றி: சர்வதேச அணுசக்தி ஏஜன்சி

IAEA

வியன்னா:அணு சக்தி திட்டம் தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிப்பதாகவும், சுற்றுப்பயணம் வெற்றிகரமானதாக இருந்தது என்றும் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அறிவித்துள்ளது.

ஈரானில் மூன்று தினங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஐ.எ.இ.எ தலைமையகத்திற்கு திரும்பிய பரிசோதனை குழு தலைவர் ஹெர்மன் நகேர்ட்ஸ் இதனை தெரிவித்தார்.

அணுசக்தி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஈரானும், ஐ.எ.இ.எவும் உறுதிப்பூண்டுள்ளது என தெரிவித்த நக்கேர்ட்ஸ், இவ்விவகாரத்தில் இனியும் நிறைய காரியங்கள் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார். ஈரானுக்கு மீண்டும் செல்ல ஐ.எ.இ.எ திட்டமிட்டுள்ளதாக நக்கேர்ட்ஸ் கூறினார்.

ஐ.எ.இ.எ குழுவினரின் சுற்றுப்பயணம் குறித்து ஈரான் கூறியது: ஐ.எ.இ.எ குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இப்பேச்சுவார்த்தை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணுசக்தி நிலையங்களை ஐ.எ.இ.எ பார்வையிடும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்துள்ளது. ரகசியமாக ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐ.எ.இ.எ குழு ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அணு சக்தி திட்டத்தின் பேரில் ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தடை விதித்துள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza