புதுடெல்லி:இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அமைதியான சிங்கம் என பிரபல சர்வதேச மாத இதழான டைம் பத்திரிகை கூறியுள்ளது.
டைம் பத்திரிகையின் பட்டியலில் கர்ஜிக்கும் சிங்கங்களும் உள்ளனர். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆகியோர் கர்ஜிக்கும் சிங்களாக உள்ளனர்.
மன்மோகன் ஒரு வேளை உள்முகச் சிந்தனையாளராக(introvert) இருக்கலாம். ஆனால் வரலாறு படைக்கும் ஆற்றல் அவருக்கு உள்ளது. மக்கள் தொகையில் உலகிலேயே 2-வது இடத்தை வகிக்கும் இந்திய தேசத்தை வழி நடத்தும் பிரதமர் அவர். இந்திய அரசியலில் அவருக்கு போதிய அனுபவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் வாழ்நாள் முழுக்க தொழில்நுட்ப அறிஞராட்சிக் கோட்பாட்டாளர்(life long technocrat) ஆவார் என டைம் கூறுகிறது.
டைம் பத்திரிகை மதிப்பீடு செய்துள்ள இதர உள்முகச் சிந்தனையாளர்களின் பட்டியலில் மகாத்மா காந்தி, மத தலைவர் மோசஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன், தொழிலதிபர் வாரன் பஃபட், மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், சமூக சேவகர் அன்னை தெரஸா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கர்ஜிக்கும் சிங்கங்களாக அயல் நோக்கு சிந்தனையாளர்களாக(extroverts) டைம் பத்திரிகை கீழ் கண்டவர்களை குறிப்பிடுகிறது:
பிரிட்டீஷ் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் போரிஸ் எல்ட்ஸின், ஆப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜாப்ஸ், குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி ஆகியோர் ஆவர்.


0 கருத்துரைகள்:
Post a Comment