Wednesday, February 1, 2012

நீரா ராடியாவின் டேப்புகளில் முறைகேடு நடந்துள்ளது – மத்திய அரசு

நீரா ராடியா
புதுடெல்லி:ஊடகங்கள் வெளியிட்ட முன்னாள் கார்ப்பரேட் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய டேப்புகளில் முறைகேடு நடந்துள்ளது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் டேப் விவகாரம் கசிந்ததில் அரசு ஏஜன்சிகளுக்கு பொறுப்பில்லை என்று மத்திய அரசு அறிக்கையில் கூறியுள்ளது.

மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் இதுத்தொடர்பான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை சீல் செய்யப்பட்ட கவரில் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி அடங்கிய பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

டேப்புகளில் உள்ள பேச்சின் துவக்கமும், இறுதியும் ஒரிஜினல் டேப்புகளில் இருந்து வேறுபடுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது என்று நீதிபதி சிங்வி தெரிவித்தார்.

பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர் கார்பரேட் தரகர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்ந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு நீரா ராடியாவும் உதவியதாகக் கூறப்படுகின்றது. ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து அவர் தொலைபேசியில் பேசிய டேப்புகள் ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 2ஜி ஊழல் வழக்கில் அவர் சாட்சியாக மட்டும் தான் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீரா ராடியாவின் டேப் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கே இந்த டேப்புகளை வெளியிட்டது யார் என்று தெரியவில்லை என்று மத்திய அரசின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza