காபூல்:தாலிபான் தலைவர் முல்லா உமர் அமெரிக்காவிற்கு கடிதம் எழுதியதாக வெளியான செய்தி அடிப்படையற்றது என தாலிபான் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் முல்லா உமர் வெள்ளை மாளிகைக்கு கடிதம் எழுதியதாகவும், கைதிகளை ஒப்படைக்க கோரியதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா அரசின் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து மூத்த தாலிபான் தலைவர்களை ஒப்படைக்காதது குறித்த எதிர்ப்பையும் தனது கடிதத்தில் முல்லா உமர் வெளியிட்டிருந்தார் என அமெரிக்கா கூறுகிறது.
ஆனால், இத்தகைய கட்டுக் கதைகளை ஆப்கானிஸ்தான் நிராகரிக்கிறது என தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் மக்கள் சரணடைய வேண்டும் என்பது அமெரிக்காவின் நிறைவேறாத விருப்பமாகும்.
கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கா திட்டமிட்டதும் ஆப்கானிஸ்தானை சரணடைய செய்வதற்காகும். ஆனால், இது ஒரு போதும் நடக்காது என ஸபீஹுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment