Friday, February 3, 2012

எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் மரணம்

எடை குறைப்பு அறுவை சிகிச்சை
ஷார்ஜா:அமீரகத்தைச் சேர்ந்த 27  வயது பெண்மணி ஒருவர் தனது எடையை குறைப்பதற்காக செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஷார்ஜா மருத்துவமனையில் மரணத்தை தழுவியுள்ளார்.

அமீரகத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயாரான சமாஹ் முஸ்தபா கடந்த இரண்டு வருடங்களாக அதிக உடல் எட்டையின் காரணமாக மூட்டு மற்றும் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தனது எடையை குறைப்பதற்காக மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று வந்தார் என்று அவருடைய குடும்பத்தார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமாஹ் முஸ்தபாவின் தாயார் தனது மகள் 96 கிலோ எடை இருந்ததாகவும் மருத்துவர்கள் வயிற்று அறுவை சிகிச்சையின் மூலம் எடையைக் குறைக்க அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து இருந்ததாகவும் அவருடைய 60 சதவீத வயிற்றுப் பகுதி அகற்றப்பட்டதாகவும் மேலும் இதன் பின்னர்தான் பிரச்சனை ஆரம்பமானதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் எடை குறந்தாலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றும் இதனை சரி செய்வதற்காக மருத்துவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ததாகவும் இதனால் தனது மகள் மரணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள் இறக்கும்போது அவர் வெறும் 40 கிலோ எடை மட்டுமே இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் எனவே சட்டப்படி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza