ஷார்ஜா:இந்தியாவின் 63வது குடியரசு தினத்தை எமிரேட்ஸ் இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம்(EIFF) வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் இரத்ததான முகாம் உள்ளிட்ட சேவைகளையும் நடத்திவருகிறது.
இதன் அங்கமாக ஷார்ஜா பல்கலைக்கழக மைதானத்தில் அதன் வருடாந்திர விளையாட்டு போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை(ஜன.27) அன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட வீரர்கள் ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு கால்பந்து, கபடி, கயிறு இழுத்தல்,ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கும் தனி நபர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டது இந்த விளையாட்டு போட்டியின் சிறப்பம்சமாகும். காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததை பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர்.


0 கருத்துரைகள்:
Post a Comment