Thursday, February 9, 2012

அமெரிக்க ட்ரோன் தாக்குதல்: பாகிஸ்தானில் 10 பேர் பலி

untitled

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதியான வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா(ட்ரோன்) விமான தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

மிரான்ஷாஹில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள தாப்பி கிராமத்தில் வீட்டின் மீது 2 ஏவுகணைகள் தாக்கின. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராளிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் நேற்று மதியத்திற்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டன. பலியானவர்கள் குறித்து மாறுபட்ட செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன. எல்லைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் – நேட்டோ – ஆஃப்கான் ராணுவ தளபதிகளின் கூட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்பு இத்தாக்குதல் நடந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza