Monday, January 30, 2012

அபுதாபி:EIFF நடத்திய இரத்ததான முகாம்

OLYMPUS DIGITAL CAMERA
அபுதாபி:இந்தியாவின் 63வது குடியரசு தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் சமூக சேவை அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம் அபுதாபி இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாமை நடத்தியது.

கடந்த ஜனவரி 27-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அபுதாபி காளிதியாவில் உள்ள இரத்த வங்கி அலுவலகத்தில் இரத்த தான முகாமை நடத்தியது. இம்முகாமில் 125 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

தங்களுடைய இரத்தத்தை தானம் செய்தவர்களுக்கும் இதுபோன்ற உன்னத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காக எமிரேட்ஸ் இந்தியா ஃபிரெடர்னிட்டி போரத்திற்கும் அபுதாபி இரத்த வங்கி நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரத்தம் கொடுக்க வருபவர்கள் எளிதில் வந்துசெல்ல ஐகாட், ஷாபியா, அபுதாபி ஆகிய இடங்களிருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வாகன வசதி செய்து தரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza