பெங்களூர்:கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுடன் முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில் ஆதரவு தேடி முதல்வர் டி.வி.சதானந்தாகவுடா ஆர்.எஸ்.எஸ் முகாமில் சீருடை அணிந்து கலந்துக்கொண்டார்.
வடக்கு கர்நாடகாவில் ஹுப்ளியில் மூன்று தினங்களாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘ஹிந்து சக்தி சங்கம’த்தில் முதல்வர் சதானந்தாகவுடா மீண்டும் சங்கின் வாலண்டியராக கலந்து கொண்டார்.
13 மாவட்டங்களில் சங்க் தொண்டர்களுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் சீருடையான காக்கி ட்ரவுசரும், வெள்ளை சட்டையும், நீலநிற தொப்பியும் அணிந்து சதானந்தகவுடா காணப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி, மோகன் பாகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பா.ஜ.கவின் தேசிய தலைவர்களும் பங்கேற்கும் முகாமில் கர்நாடகாவின் தலைமைப் பதவி குறித்த விவாதம் நடைபெறும் என கருதப்படுகிறது.
சங்கமத்தின் முதல் நாளில் கலந்துகொண்ட சதானந்தா கவுடா, தனது முதல்வர் பதவிக்காக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் ஆதரவை கோரியதாக தகவல். முதல்வர் பதவிக்காக எடியூரப்பா தீவிர முயற்சியில் ஈடுபட்டுவரும் வேளையில் கர்நாடகா பா.ஜ.க தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் தனது தலைமையகத்திற்கு அழைத்து எச்சரிக்கை விடுத்திருந்தது. கட்சியை உடைக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும், பகிரங்க அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment