Monday, January 23, 2012

ஷு சரடுகளை கட்டிய சம்பவம்: பா.ஜ.க அமைச்சர் மன்னிப்பு

சிந்த்வாரா:தனது ஷூவின் சரடுகளை பழங்குடி இன மாணவன் மூலமாக கட்டவைத்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரியுள்ளார் ம.பி பா.ஜ.க அமைச்சர் கவுரி சங்கர் பிஸன்.

நிகழ்ச்சியொன்றில் மத்திய அமைச்சர் கமல்நாத்துடன் கலந்துக்கொண்ட மத்தியபிரதேச மாநில இணை அமைச்சர் கவுரி சங்கர் பிஸன் இரண்டு தடவை தனது ஷூவின் லேஸ்(சரடு) அவிழ்ந்தபோது பழங்குடி இனத்தைச் சார்ந்த மாணவனை வைத்து கட்டியச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மன்னிப்புக்கோரியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியது:”இச்சம்பவம் எனது தவறாகும். அதற்காக மன்னிப்புக் கோருகிறேன். இனிமேல் லேஸ் (சரடு) இல்லாத ஷுக்களை மட்டுமே அணிவது என முடிவு செய்துள்ளேன். அது போன்ற 6 ஜோடி ஷுக்களை புனேயிலிருந்து வாங்கியுள்ளேன்.

இதய நோயாளியான என்னை, பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்குப் பின், கீழே குனியக் கூடாது என்று டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். சம்பவத்தன்று எனது ஷுவின் சரடு அவிழ்ந்ததைப் பார்த்து, எனது உதவியாளரான சுபம் என்ற சோட்டூ அவராகவே முன்வந்து எனக்கு உதவி செய்தார். அவரை சிறுவன் என்றும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுவது தவறு. அவருக்கு 18 வயதாகிறது. உண்மையை அறிந்துகொள்ளாமல், அவரை பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவன் என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் காந்திலால் புரியா கூறி வருவதைக் கண்டிக்கிறேன்” என்றார் கவுரி சங்கர் பிஸன்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza