ஐ.நா:ஃபலஸ்தீன் மேற்குகரையில் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் ஐ.நாவின் துயர்துடைப்பு தலைவர் மாக்ஸ் வெல் கேலார்ட் வலியுறுத்தியுள்ளார்.
இதுக் குறித்துஅவர் கூறியது: மேற்குகரையில் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும். ஃபலஸ்தீன் மக்களை நடுவழியில் நிறுத்தும் வகையில் இஸ்ரேலின் நடவடிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் பிரதேசங்களில் ஃபலஸ்தீனர்களின் பாதுகாப்பையும், நலத்தையும் உறுதிச்செய்யும் பொறுப்பு இஸ்ரேலுக்கு உண்டு என மாக்ஸ் கூறினார்.
மேற்குகரையில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்ரேல் ராணுவம் புல்டோசர் உபயோகித்து இடித்த ஃபலஸ்தீனர்களின் வீடுகளை பார்வையிட்ட பிறகு வெளியிட்ட அறிக்கையில் மாக்ஸ் வெல்கேலார்ட் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நா துயர்துடைப்புக் குழுவின் அண்மை அறிக்கையில் 2011-ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 622 ஃபலஸ்தீன் வீடுகளை இஸ்ரேல் இடித்துள்ளதாகவும், 1100 பேரை பல பிரயோகத்தின் மூலம் வெளியேற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முந்தைய வருடங்களை விட 80 சதவீதம் அதிகமாகும். இப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளும் இடிக்கப்படுமோ? என கவலையில் வாழ்வதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.
முன்அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளை இடித்ததாக இஸ்ரேல் காரணம் கூறுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment