டாவோஸ்:’பாகிஸ்தானில் அடுத்து நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் எனது கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும். பாகிஸ்தானின் புதிய பிரதமராக நான் தேர்வுச் செய்யப்படுவேன்’ என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாக்.கிரிக்கெட் அணி கேப்டனுமான இம்ரான்கான் கூறியுள்ளார்.
15 ஆண்டுகளுக்கு முன்பே இம்ரான் கான் அரசியல் கட்சியை துவக்கி இருந்த போதிலும் தற்போதைய பாகிஸ்தானின் கொந்தளிப்பான சூழல் அவருக்கு சாதகமாக மாறியுள்ளது. ஊழலுக்கு எதிராக வலுவான போராட்டம், பாகிஸ்தானை வளமான நாடாக மாற்றுவது, அமெரிக்காவுடனான உறவை துண்டிப்பது போன்ற இம்ரான்கானின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைத்து லட்சக்கணக்கான மக்கள் அவரது கட்சிப் பேரணிகளில் அணி திரளுகின்றனர்.
அரசியல் மாஃபியாக்கள் நாட்டின் வளர்ச்சியை சோர்வடையச் செய்துள்ளனர். மக்களின் விருப்பங்களை பணயம் வைத்துள்ளனர் என்று டாவோஸ் பொருளாதார பேரவையை பார்வையிட வந்த இம்ரான்கான் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment