Saturday, January 14, 2012

உள்நாட்டுப் போரை நோக்கி சிரியா -அரபு லீக்

Mideast Syria
பெய்ரூத்:மக்கள் எழுச்சிப் போராட்டமும், சிவிலியன் மரணங்களும் தீவிரமடைந்துள்ள சிரியா, உள்நாட்டுப் போரை அண்மிப்பதாக அரபுலீக்கின் தலைவர் நபீல் அல் அரபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, அரபு லீக்கின் கண்காணிப்புக் குழுவை சார்ந்த அல்ஜீரியா, சூடான் பிரதிநிதிகளை திருப்பி அனுப்பியதாக கெய்ரோ தலைவர் அத்னான் அல் குதைர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களை காட்டி இருவரும் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

அரபு லீக் முன்வைத்த பரிந்துரைகளை அமுல்படுத்த பஸ்ஸாருல் ஆஸாத் தயாராகவில்லை என நபீல் அல் அரபி குற்றம் சாட்டுகிறார். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு இதிலிபின் வடமேற்கு அரிஹா நகரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 20ஆயிரம் பேர் இங்கு நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

தெற்கு மாகாணமான தரா, ஹும்ஸ் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தேறின.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza