புதுடெல்லி:கெளரவ கொலை ஜாமீன் கிடைக்காத குற்றம் என கூறும் சட்ட வரைவை மத்திய சட்ட கமிஷன் தயாரித்துள்ளது.
வெவ்வேறு ஜாதிகளைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காப் பஞ்சாயத்து கூடி தண்டனை விதிப்பது தெளிவான சட்டமீறல் என கூறியுள்ள சட்ட கமிஷன் சட்டவிரோதமாக கூட்டம் நடத்துவது ஜாமீன் கிடைக்காத குற்றம் என கூறும் சட்ட வரைவை முன்வைத்துள்ளது.
இதுக்குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கமிஷன் ஆராய்ந்து வருகிறது.கமிஷன் பரிந்துரைத்துள்ள சட்டவிரோதமாக கூட்டம் நடத்துவது தடை(திருமண சுதந்திரத்தில் தலையிடுதல்) மசோதா 2011-இல் குற்றங்கள் ஜாமீன் இல்லாத, வாரண்ட் இல்லாமல் கைது செய்யும் உரிமை, கட்சி தாரர்களிடையே ஒத்து தீர்ப்பு ஆகியவற்றிற்கு இடம் இல்லை. இதுத்தொடர்பான வழக்குகள் சிறப்பு நீதிபதியின் தலைமையிலான சிறப்பு நீதிமன்றங்களில் நடத்தவும் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மாநிலங்கள் இந்த சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும். இந்த நீதிமன்றங்களுக்கு செசன்ஸ்(அமர்வு) நீதிமன்றங்களின் அதிகாரம் இருக்கும்.
கெளரவக் கொலை இந்திய தண்டனைச் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவர 300-ம் பிரிவை திருத்தவேண்டிய தேவை இல்லை என்றும், தற்போதைய பிரிவுகளே போதும் என்றும் சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது.
கெளரவக் கொலையை தனிக்குற்றமாக மாற்ற அரசு பரிந்துரைத்து இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு இத்தகையதொரு வரைவுச்சட்டம் தயாராகி உள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சரவைக் குழுவும் இதனை பரிசோதிக்கும். வரைவுச் சட்டத்தின் அடிப்படையில் ஏதேனும் வகையிலான தரத்தில் உள்ள சட்டரீதியான திருமண உறவை எதிர்ப்பதற்கோ தடையை ஏற்படுத்துவதற்கோ தனிநபர்களுக்கும், குழுக்களுக்கும் உரிமை இல்லை.
திருமணம் புரிய திட்டமிடுபவர்களும் திருமணம் என்ற வார்த்தை வரைவிலக்கணத்தில் அடங்குவர். சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தது 6 மாதம் சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். தம்பதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தீர்மானத்தில் தலையிடுபவர்களுக்கு ஒரு வருடத்திற்கு குறையாத சிறைத் தண்டனையையும் சட்ட வரைவு சிபாரிசுச் செய்கிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment