Tuesday, January 17, 2012

அணு விஞ்ஞானி கொலை:குற்றவாளிகள் கைது – ஈரான் அறிவிப்பு

soor
டெஹ்ரான்:அணு விஞ்ஞானி முஸ்தஃப அஹ்மதி ரோஷனை கொலைச்செய்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை கைது செய்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜானி இக்கைது சம்பவத்தை வெளியிட்டுள்ளார். அணு விஞ்ஞானியின் கொலையின் பின்னணியில் இஸ்ரேலும், அமெரிக்காவும் செயல்பட்டுள்ளது என கூறிய லாரிஜானி எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.

கொலையைக் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், விசாரணை நடந்துவருவதாகவும் லாரிஜானி கூறியுள்ளார். இம்மாதம் 11-ஆம் தேதி முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இக்கொலையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் செயல்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டி வந்தது.

இதற்கிடையே, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தவிருந்த போர் ஒத்திகை ரத்துச் செய்யப்பட்டது. இரு நாடுகள் இடையே உருவான கருத்துவேறுபாடு காரணமாக போர் ஒத்திகை ரத்துச் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. ஈரானின் மத்தியவங்கி மற்றும் எண்ணெய்த்துறை மீது தடைவிதிக்க அமெரிக்காவிற்கு பயம் என அண்மையில் இஸ்ரேலின் துணைப்பிரதமர் ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இது அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza