ஆம்ஸ்டர்டாம்:பிரான்சிற்கு அடுத்து ஐரோப்பிய நாடான நெதர்லாந்தும் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்திற்காக முகத்தை மறைக்கும் நிகாபை அணிவதற்கான தடையை அமுல்படுத்தப் போகிறது. அடுத்த ஆண்டு முதல் தடை அமுல்படுத்தப்படும் என்பது அரசின் முடிவாகும்.
முகத்தை மறைக்கும் விதமான ஆடைகளை அணிவதை தடுக்கும் சட்டம் பொது இடங்களில் ஹெல்மட் அணிவதையும் தடுக்கும் என துணை பிரதமர் மாக்ஸிம் வெர்ஹாகன் கூறியுள்ளார்.
முகத்தை மறைக்க தடை விதிக்கும் சட்டத்தை மீறுபவர்கள் 510 டாலர்கள் அபராத தொகையை செலுத்த இந்த சட்டம் கூறுகிறது. ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நெதர்லாந்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 10 லட்சம் ஆகும். ஆனால் இவர்களில் முகத்தை மறைக்கும் ஆடையை(நிகாப்) அணிபவர்கள் வெறும் 400 பேர் மட்டுமே.
பாராளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவு அளித்துவரும் முஸ்லிம் எதிர்ப்பு கட்சியான ஃப்ரீடம் கட்சியின் வற்புறுத்தலே முஸ்லிம் பெண்கள் நிகாபை அணிவதற்கான தடைக்கு முக்கிய காரணமாகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment