வாஷிங்டன்:பூமிக்கு அடியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவதற்கான மிக சக்தி வாய்ந்த வெடிக்குண்டை தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா ராணுவத்தின் கைவசமிருக்கும் பங்கர் பஸ்டர் வெடிக்குண்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க முடியாது. இதனை புரிந்துக்கொண்ட அமெரிக்கா புதிய வெடிக்குண்டை தயாரிக்க திட்டம் வகுத்துள்ளது. இதனை குறிப்பிட்டு பெண்டகன் அமெரிக்க காங்கிரஸிற்கு ரகசிய அறிக்கையை இம்மாதம் அளித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு துறை அதிகாரியை மேற்கோள்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் கூறுகிறது.
பூமிக்கு அடியில் உள்ள பாறைகள் மற்றும் காங்க்ரீட் சுவர்கள் ஆகியவற்றை துளைத்து உள்ளே செல்லும் சக்திமிகுந்த 20 வெடிக்குண்டுகளை தயாரிக்க பெண்டகன் இதுவரை 33 கோடி டாலர் தொகையை செலவிட்டுள்ளதாக பத்திரிகை கூறுகிறது. போயிங் நிறுவனம்தான் இக்குண்டுகளை தயாரித்து வருகிறது.
பெரும் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க பங்கர் பஸ்டர் குண்டுகளுக்கு வலு இல்லை என்பதை கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா ஒப்புக்கொண்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment