Thursday, January 26, 2012

பொறுமை இழந்தால் அடி கொடுங்கள்: ஹஸாரே தடாலடி

ஹஸாரே

ரலேகான்சித்தி:ஊழலை கண்டு நீங்கள் பொறுமையை இழந்தால் அடி கொடுக்கலாம். அப்பொழுதுதான் மனம் அமைதி அடையும் என வலுவான ஊழல் தடுப்பு மசோதா கோரி போராட்டம் நடத்திவரும் அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.

‘கலி கலி மைன் சோர் ஹி’ என்ற திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஹஸாரே.

‘கலி கலி மைன் சோர் ஹி’- திரைப்படம் தனிநபர் நடத்தும் போராட்டத்தை சித்தரிக்கிறது. நிதின் மன்மோகன் மற்றும் சஞ்சய் பூனமிஜாவும் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை ருமி ஜாஃப்ரா இயக்கியுள்ளார்.

அடிப்பதற்கு ஊக்கம் அளிக்கும் ஹஸாரே தன்னை காந்தீயவாதி என அழைக்க தகுதியற்றவர் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஹஸாரே காந்திய வழியை பின்பற்றவில்லை. வன்முறையை ஆதரிக்கும் ஹஸாரே தன்னை சுயமாக காந்தியவாதி என அழைப்பது துரதிர்ஷ்டவசமானது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவ்தரி தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி மத்திய அமைச்சர் சரத்பவாரின் கன்னத்தில் ஒருவர் அறைந்த சம்பவத்தை முதலில் ஆதரித்த ஹஸாரே பின்னர் மழுப்பலான பதிலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza