Tuesday, January 24, 2012

மலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி

Ramesh Upadhyay
பலியா(உ.பி):2008 மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதியான முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய்(வயது 60) உ.பி மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

மஹாராஷ்ட்ரா மாநிலம், மலேகான்  2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் 12 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் முதல் எதிரியான லெப்டினென்ட் கலோனல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாய் (60) குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இப்போது மகாராஷ்டிரத்தின் ராய்கார்க்கில் உள்ள தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாய்ரியா தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

ரமேஷ் உபாத்யாய் சார்பில் அவரது மகன் விஷால், திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அகில பாரத ஹிந்து மகா சபா என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பு சார்பாக அவர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza