Tuesday, January 24, 2012

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு
டேராடூன்(உத்தரகாண்ட்):உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்டது. இதே இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு ஹசாரே குழுவினர் மீது செருப்பு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராகுல் நின்ற இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் ஷூ விழுந்ததாக எஸ்.பி.ஜி.என்.கோஷ்வாமி தெரிவித்துள்ளார்.

குல்தீப் என்ற இளைஞர் ஷூ வீசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாதுகாப்பு அதிகாரிகளும், காங்கிரஸ் தொண்டர்களும் இணைந்து குல்தீபை பிடித்தனர். அவரை தாக்கவேண்டாம் என காங்.தொண்டர்களிடம் ராகுல் கூறினார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகிய ஹசாரே குழுவினர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் செருப்பு வீச்சு நடந்தது. கிஷன்லால் என்பவர் செருப்பை வீசியதாக போலீஸ் தெரிவித்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza