Wednesday, January 25, 2012

ருஷ்டியின் வீடியோ கான்ஃபரன்ஸ் ரத்து

rushdie
ஜெய்ப்பூர்:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் வீடியோ கான்ஃப்ரன்ஸ் கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சி அமைப்பாளர்களால் ரத்துச் செய்யப்பட்டது. ருஷ்டியின் வீடியோ கான்ஃப்ரன்ஸ் உரையை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த இலக்கிய திருவிழா அமைப்பாளர்கள் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ருஷ்டியின் முகத்தைக் கூட நாங்கள் காண விரும்பவில்லை என முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

போலீஸ் உத்தரவின் பேரில் ருஷ்டியின் வீடியோ கான்ஃபரன்ஸ் உரை ரத்துச் செய்யப்பட்டதாக நிகழ்ச்சி துவங்கவிருந்த சில நிமிடங்களுக்கு முன்னால் விழா அமைப்பாளர் குழுவைச் சார்ந்த சஞ்சய் ராய் அறிவித்தார்.

ருஷ்டியின் வீடியோ கான்ஃப்ரன்ஸ் நடத்தவிருந்த அரங்கில் நிகழ்ச்சியை சீர்குலைக்க சில எதிர்ப்பாளர்கள் நுழைந்துள்ளார்கள் என்றும், இது பிரச்சனைகளை உருவாக்கும் என்றும் போலீஸ் தெரிவித்தது என ராய் கூறினார். தாக்குதல் நடத்தப்படும் என சில அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது. தாக்குதல் நடக்காமல் தவிர்ப்பது அத்தியாவசியமானது. ஆதலால் எங்களது தீர்மானத்தை மறுபரிசீலனைச் செய்தோம் என ராய் மேலும் கூறினார்.

ருஷ்டியின் உரையை ஒளிபரப்பினால் ஏற்படும் எதிர் விளைவுகளை கண்டு அஞ்சி வீடியோ கான்ஃப்ரன்சிற்கு அனுமதி அளிக்கமாட்டோம் என நிகழ்ச்சி அரங்கின் உரிமையாளர்கள் எங்களுக்கு தெரிவித்தார்கள் என துணை போலீஸ் கமிஷனர் வீரேந்திரஜலா கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza