பாரிஸ்:பிரான்ஸ் நாட்டு ராணுவம் ஆஃப்கானிலிருந்து ஒருவருடம் முன்பே வாபஸ் பெறும் என அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் ராணுவம் இவ்வாண்டு மார்ச் மாதம் வாபஸ் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நான்கு பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்களை ஆஃப்கான் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பிரான்சுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தை விரைவில் வாபஸ் பெறுவது குறித்து பிரான்ஸ் ஆலோசித்து வந்தது.
நேற்று பாரிஸில் வைத்து ஆஃப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயி உடன் சர்கோஸி கலந்துரையாடினார். ஆஃப்கானில் 3600 பிரான்ஸ் ராணுவ வீரர்கள் ஆக்கிரமிப்பு நேட்டோ படையில் இடம் பெற்றுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment